- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
சீரான சிந்தனையுடன் அனைவருடனும் பழகும் துலா ராசியினரே.
இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தைத் தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.
வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.
பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.
தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா என்ற எண்ணம் உண்டாகும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
பெண்களுக்கு சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது நல்லது.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு 108 முறை குங்கும அர்ச்சனை செய்யுங்கள். வெற்றிகளைக் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
*************************************************************************************
விருச்சிகம்:
சுறுசுறுப்புடன் அனைத்து விசயங்களையும் நடத்திவிடும் விருச்சிகராசியினரே!
இந்த வாரம் பலவகையான யோகத்தைத் தரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக் கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள்.
அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எல்லா நன்மைகளும் நடைபெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
******************************************
தனுசு:
உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் மகிழ்ச்சியடையும் குணமுடைய தனுசு ராசியினரே.
இந்தவாரம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.
தொழில் வியாபாரத்தில் புத்திசாதுர்யத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.
பரிகாரம்: குரு காயத்ரீ சொல்லி பகவானை வழிபாடு செய்ய துன்பங்கள் விலகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
**************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |