- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
தீர்க்கமான முடிவுகளை எடுக்க நினைக்கும் மேஷ ராசியினரே.
இந்த வாரம் வீண்குழப்பம் ஏற்படும். எனவே எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய் யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவன மாகப் பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம். கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 9
பரிகாரம்: கந்தர் அனுபூதி படித்து முருகனை வணங்க மனக்குழப்பம் நீங்கும்.
*******************************************************************************************
ரிஷபம்:
உதவி செய்தவர்களை என்றும் மறக்காத ரிஷபராசியினரே.
இந்த வாரம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். வார இறுதியில் காரியத் தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும்.
ஆடம்பரமான பொருட்களை வாங்கத் தூண்டும். கடன் தொல்லை குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.
அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு எதிலும் மெத்தனப் போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தைக் குறைப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்
எண்கள்: 4, 6
பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்து வாருங்கள்.
*******************************************************************************************
மிதுனம்:
எடுத்த காரியங்களை துரிதமாக நிறைவேற்றத் துடிக்கும் மிதுன ராசியினரே.
இந்த காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம். கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும்.
வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.
பெண்களுக்கு எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு
எண்கள்: 2, 5
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.
********************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |