பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அவிட்டம்:
கிரகமாற்றம்:
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் பத்தாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்களின் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் இருபத்தி ஆறாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று உங்கள் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிரச்சினை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவும் திறமை உடைய அவிட்ட நட்சத்திர அன்பர்களே.
இந்த புத்தாண்டில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம். கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
பெண்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.
+: வீண் பயம் அகலும்
-: மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படலாம்
பரிகாரம்: பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |