பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கேட்டை:
கிரகமாற்றம்:
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் உங்களின் நான்காம் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் உங்களின் பதினைந்தாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்
01-09-2020 அன்று பகல் 2.16 மணிக்கு கேது பகவான் உங்கள் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் உங்களின் நான்காம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
27-12-2020 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் உங்களின் நான்காம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறுகிறார்.
05-04-2021 அன்று இரவு 1.09 மணிக்கு குரு பகவான் அதிசாரம் பெற்று ஆறாம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்பும் கேட்டை நட்சத்திர அன்பர்களே.
இந்த புத்தாண்டில் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.
பெண்கள் எந்தச் செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
+: புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்
-: எதிர்பாராத செலவுகள் உண்டாகும்
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர குடும்ப பிரச்சினை தீரும். காரியத் தடை விலகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |