மாத பலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு: மார்ச் மாத பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் (வ), சனி, ராகு, செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும், தயங்காத துலா ராசியினரே இந்த மாதம் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் வீண் அலைச்சலை தரும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவு படுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம் விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வர வேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

          

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

சுவாதி: இந்த மாதம் தாய் மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மன பாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்து சேரும்.

பரிகாரம்: வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து சுக்கிர பகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24 |

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் (வ), சனி, ராகு, செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசியினரே உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். ராதியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் மனோ தைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகன்று உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும் போது ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வர வேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.

அனுஷம்: இந்த மாதம் ஊழியர்களுக்கு வர வேண்டியவை அனைத்தும் வந்து சேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடி வருவார்கள்.

கேட்டை: இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும் | சந்திராஷ்டம தினங்கள்: 5, 6 | அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27 |

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் (வ), சனி, ராகு, செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் தனுசு ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசியாதிபதி குருவின் சஞ்சாரம் பல வித நற்பலன்களை அளிக்கும். சூரியன் சஞ்சாரம் துணிச்சலாக எதிலும் ஈடுபடச் செய்யும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பண வரத்தும் திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.

கலைத் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சூரியன் சஞ்சாரத்தால் அரசியல் துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மூலம்: இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப் பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடன் பிறந்த சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

பூராடம்: இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பண வரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

பரிகாரம்: சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும் | சந்திராஷ்டம தினங்கள்: 7, 8 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 28, 29 |

மார்ச் மாதம் கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT