மாத பலன்கள்

மகரம், கும்பம், மீனம்: பிப்ரவரி மாத பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின் வாங்காத மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பண வரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பெண்களுக்கு பண வரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவார்கள். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.

          

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலையே உண்டு. அரசாங்க பணிகள் அனைத்தும் தொய்வு இல்லாமல் நடைபெறும்.

திருவோணம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றி பெறுவீர்கள். தொடந்து வரும் சவால்களைச் சந்தித்த பின்னரே வெற்றி கிட்டும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மன கஷ்டம், பண கஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு ஏற்ற காலம் இது. ரசனையைப் புரிந்து கொண்டு உங்கள் திறமையை காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பெண்கள் உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 03, 04 | அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 10, 11 ,12 |

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன், சனி, ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: மனதில் உறுதி கொண்ட கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.

புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும் படி இருந்தாலும் சாதகமாக முடியும். பண வரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். கலைத் துறையினருக்கு பண வரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் மன தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பண வரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியளிக்கும். கன்னிப் பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. மூத்த சகோதரர்களிடம் விட்டு கொடுத்தல் நன்மையைத் தரும்.

சதயம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் பாராட்டுப் பெறுவார்கள். தனித் திறமை மேம்படும். சக மாணவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும். பொழுது போக்கிற்கு இடம் கொடுக்க வேண்டாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தெய்வீக சிந்தனையுடன் செயல்பட வெற்றி நிச்சயம். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் |சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 05, 06, 07 | அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 13, 14 |

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். ராசிநாதனின் சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மன கவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல் நிலையில் கவனம் அவசியம். எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோ தைரியம் கூடும். கன்னிப் பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்த்தவர்கள் அடங்குவர். தந்தையுடன் விவாதம் வரும். கவனம் தேவை. தகப்பனார் வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

உத்திரட்டாதி: இந்த மாதம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண் குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பண வரத்து தாமதப்படும். சொத்துகள் சம்பந்தமாக பிரச்சனைகள் எதுவும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக மாறும்.

ரேவதி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். இரவு நேரப் பயணங்களே தவிர்ப்பது நல்லது. சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் |அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 08, 09 | அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 15, 16, 17 |

இந்த மாதம் கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT