மாத பலன்கள்

துலாம் ராசி அன்பர்களே! நவம்பர் மாத பலன்கள்; எதிர்ப்பு விலகும்; கூடுதல் பணி; திடீர் மன வருத்தம்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சூரியன் - தன ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.


கிரக மாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


நியாயமும் நேர்மையும் நிர்வாகத் திறனும் கொண்டு துலாம் ராசியினரே!

நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். சூரியன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கெனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கெனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

சித்திரை:
இந்த மாதம் கடன் பிரச்சினை தீரும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் நிர்ணயிக்கும் திறன் குறையலாம். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது வீண் பழிச்சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.


சுவாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும். பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். திசைபுக்தி அனுகூலமிருந்தால் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.


விசாகம்:
இந்த மாதம் பரம்பரைச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். பெண் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பழகுங்கள். அவர்களால் சில பிரச்சினைகள் எழலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.

பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
******************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT