- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம்
(மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுகஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - அயனசயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 13ம் தேதி புத பகவான் சுக ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம்.
இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் எந்தவொரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்கப் பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மிருகசிரீஷம் 3, 4:
வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். வார தொடக்கத்தில் மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின்போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
திருவாதிரை:
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3:
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பரிகாரம்: வாரம் ஒரு முறை அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வர மன நிம்மதி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30
~~~~~~~~~~~~~~~~~~
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |