மாத பலன்கள்

மீன ராசி அன்பர்களே! ஏப்ரல் மாத பலன்கள்; வாகனத்தில் கவனம்; தொழிலில் லாபம்; திடீர் செலவு; காரியத் தடை! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
ராசியில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனக்கவலை நீங்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தாயாரின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்தவொரு வேலையைச் செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுகப் போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பைத் தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பூரட்டாதி:
இந்த மாதம் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாகப் பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

உத்திரட்டாதி:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும். புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் ஏற்படும். மீன எனினும் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம், கவனம் தேவை.

ரேவதி:
இந்த மாதம் மற்றவர்கள் செயல்களால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் கொண்டைக் கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன், வியாழன்
அதிர்ஷ்ட எண்: 5, 6, 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, மஞ்சள்
*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT