மாத பலன்கள்

தனுசு ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள்; ஆரோக்கியத்தில் கவனம்; உற்சாகம்; பிடிவாதம் வேண்டாம்; பணம் புரளும்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் வேகத்தைக் காட்டாமல் விவேகத்துடன் செய்வது நல்லது. நீண்ட நாட்களாகத் தீட்டி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும்.

பங்குதாரர்களிடம் வீண் மனக்கசபு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.

குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் இறுக்கமான சூழ்நிலை அகலும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும்.

பெண்களுக்கு எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு பணம் புரளும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். நண்பர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மைகளைத் தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கவனத்தைச் சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களைப் படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

மூலம்:
இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பூராடம்:
இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.

உத்திராடம்:
இந்த மாதம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும்போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கைத் தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனக்கவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: சித்தர்கள் சந்நிதிக்குச் சென்று வணங்கி வாருங்கள். மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள்
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT