- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.
10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மேஷ ராசியினரே!
இந்த மாதம் பணவரத்து கூடும். ஆனால் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியைத் தரும். குடும்பத்தில் எதிர்பாராத சில காரியங்கள் நடக்கலாம்.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். தொழில் சிக்கல்கள் நீங்கும். தொழிலில் நன்மைகள் நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். மேலிடத்தின் மத்தியில் மதிப்பு உயரும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். சக மனிதர்களிடம் மரியாதை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களைப் படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
அஸ்வினி:
இந்த மாதம் லாபம் உண்டாகும். பண விஷயங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெற்றோர்களின் சொற்படி நடப்பது நன்மைகளைத் தரும்.
பரணி:
இந்த மாதம் பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். காரியத் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.
கார்த்திகை:
இந்த மாதம் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு அரளி மாலை அர்ப்பணித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
**************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |