- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு, சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹு - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே!
இந்த மாதம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்யத் தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாகக் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும்.
வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்பச் செலவை சமாளிக்கத் தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்குத் தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது.
கலைத்துறையினர் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.
அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களைச் சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.
மூலம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.
பூராடம்:
இந்த மாதம் எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். வீண் பேச்சுகளைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தைக் குறைப்பது நல்லது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். மனக்கஷ்டம் தீரும்.
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29
~~~~~~~~~~~~~~~~~~~
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |