பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
பேச்சில் இனிமையும் சாதுர்யமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் பொருள் வரவும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.
செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன்கள் தாமதப்படும்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மகிழ்ச்சி கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு எந்தவொரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம்.
அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும் செலவும் ஏற்பட்டாலும் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.
திருவாதிரை:
இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
பரிகாரம்: பானகம் நைவேத்தியம் செய்து பெருமாளை வணங்குங்கள். முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
~~~~~~~~~~~~~~~~~~~~
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |