- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
தன்னம்பிக்கை ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். அதனால் எந்தவொரு வேலை பற்றியும் அதிகம் யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பணத்தேவை உண்டாகலாம். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும், சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்துச் செயல்படுவது நல்லது.
கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.
அஸ்வினி:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் துணிவு உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மைகளை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதைத் தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வணங்கி வாருங்கள். பல நாட்களாக இழுபறியான காரியம் கூட வெற்றிகரமாக முடியும். மனக் கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
~~~~~~~~~~~~~~~~~~~
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |