மாத பலன்கள்

மீனம் ராசியினருக்கான ஆகஸ்ட் மாத பலன்கள் முழுமையாக | 2025

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - சப்தம களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 03.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17.08.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.08.2025 அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 25.08.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த மாதம் உடல் உபாதைகள் அகலும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மன கவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல் நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் வர வேண்டிய பண பாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள்.

உத்திரட்டாதி: இந்த மாதம் நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சவுகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள்.

ரேவதி: இந்த மாதம் புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பரிகாரம்: நவ கிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும் | சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 01, 02, 28, 29 | அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 10, 11, 12

இந்த மாதம் கிரகங்களின் நிலை:

SCROLL FOR NEXT