மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றம்: 02.07.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற ஆரம்பிக்கிறார் | 03.07.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் புதன் வக்ரம் பெற ஆரம்பிக்கிறார் | 17.07.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சூரியன் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17.07.2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26.07.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29.07.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் கேந்திர ஸ்தானங்கள் மிக பலமாக இருப்பதால் இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள்.
தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு பணவரவு சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு அண்டை அயலாருடன் இருக்கும் மனக் கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும்.
உத்திரட்டாதி: இந்த மாதம் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
ரேவதி: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
பரிகாரம்: வியாழ கிழமை அன்று அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று குரு பகவானை வணங்கி விட்டு வரவும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 04, 05, 06 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 20, 21 | இந்த மாதம் கிரகங்களின் நிலை: