மிதுனம்: (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரக நிலை - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் - ராசியில் சூரியன், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றம்: 02.07.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ரம் ஆரம்பிக்கிறார் | 03.07.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார் | 17.07.2025 அன்று ராசியில் இருந்து சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17.07.2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 26.07.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார் | 29.07.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் ராசிநாதன் புதன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஆட்சியாக வருகிறார். பஞ்சம விரையாதிபதி சுக்கிரன் ராசிக்கு கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு வருகிறார். வசதிகள் பெருகும். உறவினர்களு டன் சுமூக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். பண விரையமும் காரியத் தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.
அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அரசியல்வாதிகள் வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். ராசி நாதன் மற்றும் சுகாதிபதியான புதன் மிக அனுகூலமாக சஞ்சரிப்பதால் மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடைய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
திருவாதிரை: இந்த மாதம் முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வலம் வரவும் | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 12, 13 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 01, 27, 28 | இந்த மாதம் கிரகங்களின் நிலை:
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.