மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரக நிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், குரு - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றம்: 02.07.2025 அன்று லாப ஸ்தானத்தில் சனி வக்ரம் ஆரம்பிக்கிறார் | 03.07.2025 அன்று சுக ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார் | 17.07.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17.07.2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26.07.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29.07.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் துணிச்சலான சில முடிவுகளை எடுக்க வைப்பார். உங்களுக்கு நன்மைகளை அள்ளித் தருவார். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும்.
உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பண வரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக் கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழில் ஸ்தானத்தை சூரியன் பார்க்க இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வழக்குகளில் சுமூக முடிவுகள் வந்து சேரும். வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.
அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பரணி: இந்த மாதம் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.
பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வர நன்மை உண்டாகும். | சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 07, 08 | அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 22, 23, 24 | இந்த மாதம் கிரகங்களின் நிலை: