மேஷம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வராக்கடன் வந்து சேரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர். உடல்நிலை சீராக அமையும். பழைய வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். பங்குதாரர் ஆதரிப்பார்.
மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். எதிர்மறை சிந்தனை வரும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் போட்டி விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூர்வீகச் சொத்து தொடர்பான வில்லங்கம் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.
கன்னி: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர். முன்கோபம் குறையும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். புதிய கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
விருச்சிகம்: பணப் பற்றாக்குறை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். முன்கோபத்தை தவிர்ப்பீர். வீட்டில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். வியாபாரம் சிறக்கும்.
தனுசு: செலவுகளை கட்டுப்படுத்துவீர். குடும்ப சூழல் அறிந்து பொறுப்பாக செயல்படுவீர். தாயின் உடல்நிலை சீராகும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
மகரம்: புதிய சிந்தனை மனதில் தோன்றும். பணவரவு உண்டு. பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலக மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும்.
கும்பம்: எதிர்பார்த்தபடி பணம் வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அலுவலகத்தில் பொறுப்பு கூடும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மீனம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.