மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்கள்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.
மிதுனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.
கடகம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராடுவீர். குடும்பத்தில் ஓரளவு அமைதி திரும்பும். வியாபாரத்தில் குழப்பம் வந்து போகும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
சிம்மம்: சோர்வு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். எதற்கும் அவசரப்பட வேண்டாம். எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகரீதியான பயணம் அலைச்சல் தரும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
கன்னி: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர். ஓரளவு பணம் வரும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடுகூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்: முகப்பொலிவு கூடும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படவும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கூட்டுத் தொழிலில் வாடிக்கையாளர்களின் வருகை கூடும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.
கும்பம்: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மீனம்: சமயோஜித புத்தியுடன் பேசி சில வேலைகளை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளால் மன நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.