இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 டிசம்பர் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த இழுபறி நிலை மாறும். சகோதரர்கள் உங்களை புரிந்து கொள்வர். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு கிட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். பயணங்கள் திருப்தி தரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: பணவரவு உண்டு. சவாலான விஷயங்களை சாதாரணமாக முடித்து காட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களால் பயடைவீர். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். எதிர்பாராத பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.அலுவலகத்தில் மதிப்புயரும்.

சிம்மம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாள்வீர்கள். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலக பணிகளை வீட்டிலும் செய்ய வேண்டி வரும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல் கூடும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிலும் நிதானமாக செயல்படவும்.

விருச்சிகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை கூடும். பயணங்கள் திருப்தி தரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

தனுசு: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். முகப் பொலிவு கூடும். கடனாக கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மகரம்: நவீன மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம் பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கும்பம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்: மனக்குழப்பம் வந்து போகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். வேற்றுமொழி வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.

SCROLL FOR NEXT