இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். தம்பதிக்குள் விவாதம் வேண்டாம். மனஸ்தாபம் வர வாய்ப்பு உண்டு. அடுத்தவர்களை குறை கூறாதீர்கள். வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு கூடும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

          

மிதுனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வருகையால் வீடுகளைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரிப்பார்.

சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, கருத்து மோதல் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: கையிருப்பு கரையும். குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து போகவும். கொஞ்சம் அலைச்சல், டென்ஷன் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

துலாம்: ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர். ஓரளவு லாபம் உண்டு.

விருச்சிகம்: உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அக்கம் பக்கத்தினரைபகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கோபம் குறையும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் பிறரை குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பயணங்களால் ஆதாயமுண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

SCROLL FOR NEXT