மேஷம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
மிதுனம் : நெடுநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். மனைவியின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம் : பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் நிம்மதி கிட்டும். நீண்ட நாள் கனவு நனவாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
சிம்மம் : குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.
கன்னி : குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். முன்கோபம் விலகும். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
துலாம் : தடைகள் உடைபடும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
தனுசு : நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாட்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம் : புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம் : பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம் : குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு தெரிவிப்பர். பிள்ளைகளால் டென்ஷன் கூடும். எதிலும் அவசரப்படாதீர்கள். பேச்சில் கவனம் தேவை. தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.