இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். பூர்வீக சொத்து தொடர்பான வில்லங்கம் விலகும். சகோதர சகோதரிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர். உடல் நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையுண்டு. தூக்கமின்மை விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

          

மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். நட்புவட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளை தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கடகம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. மனைவிவழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். எதிலும் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் பற்றி குறை கூறுவதை தவிர்த்துவிடவும்.

கன்னி: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரரீதியான பயணம் திருப்தி தரும். லாபமுண்டு.

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். புதிய கொள்முதல் செய்வீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

தனுசு: குடும்ப சூழல் அறிந்து பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவர். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கும் எண்ணம் தோன்றும். மனைவி, தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரரீதியாக பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

மகரம்: பணப் பற்றாக்குறை,டென்ஷன் வந்து போகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. மனைவிவழியில் ஆதாயம் உண்டு. ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர். பழைய பங்குதாரர்கள் வந்து சேருவர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: எதிர்பார்த்தபடி பணம் வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம், புதிய பதவி கிட்டும். பொறுப்பு கூடும்.

மீனம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு,மரியாதை உயரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

SCROLL FOR NEXT