மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிப்பீர். தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் அலைச்சல் விலகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் கூடும்.
மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். அரசால் அனுகூலம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.
கன்னி: பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் மத்தியில் கவுரவம் கூடும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பங்குதாரர்கள் முக்கிய ஆலோசனை தருவர்.
துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பழையபாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் பாராட்டுவர். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு சாதிப்பீர்.
தனுசு: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. சேமிப்புகள் கரையும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மகரம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு உயரும்.
மீனம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். தம்பதிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.