மேஷம்: மனதில் இருந்த அச்ச உணர்வு நீங்கி, தைரியம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மறைந்து, அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள். பொருட்கள் சேரும்.
ரிஷபம்: உங்கள் மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பண வரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
மிதுனம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வங்கியில் கேட்டிருந்த கடன் உதவிகள் கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கடகம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். வெளி உணவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உங்களைச்சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.
சிம்மம்: நீண்ட காலமாக இழுபறியாக உள்ள பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.
கன்னி: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். தந்தை உடல்நிலை சீராகும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
துலாம்: வெகுநாளாக மனதை வாட்டிய பிரச்சினைக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்திருக்கும் ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
விருச்சிகம்: உங்களது எதார்த்தமான, கலகலப்பான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பெற்றோரின் விருப்பத்தை அறிந்து செயல்படுவீர்கள்.
தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்திருக்கும் பண உதவி சற்று தாமதமாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். வெளி உணவுகள் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை.
மகரம்: பால்ய நண்பர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் வந்து நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரி அன்பு காட்டுவார். முக்கிய வேலையை விரைந்து முடித்து, அவரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். வாகனச் செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். தடைகள், இடையூறுகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.
மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். பணப் புழக்கம் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.