இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 டிசம்பர் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வெளியூர் பயணம் நன்மையைத் தரும்.

ரிஷபம்: காரியத்தடைகள், அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்தினரால் வீண் செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். எதிலும் நிதானம் தேவை.

மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவிகளும் தேடி வரும். மனதில் புத்துணர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்: தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள்.

கன்னி: நினைத்த காரியங்கள் தடங்கலின்றி நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

துலாம்: எந்தப் பிரச்சினையை சமாளிக்கும் மனப்பக்குவம் தைரியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உடல் சோர்வு, அலைச்சல் வந்து போகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். சில காரியங்கள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடியும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதித்து விடுவீர்கள். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வராது என்றிருந்த தொகை கைக்கு வந்து சேரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மகரம்: விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் முடிவுக்கு வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு. தாயார் ஆதரவாக இருப்பார்.

கும்பம்: கடந்தகால இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு உண்டு.

SCROLL FOR NEXT