இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 நவம்பர் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகரின் உதவியை நாடுவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் ஒரு வேலையை இரண்டு முறை முடிக்க வேண்டி வரும்.

கடகம்: பழைய சுகமான நினைவுகளில் மூழ்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். சிலர் நன்றி மறந்து பேசுவர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். புதிய இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

சிம்மம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். விருந்தினர் வருகை உண்டு. ஆன்மிகம், யோகாவில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் பிரபலங்கள் உதவியை நாட வேண்டி வரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

கன்னி: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். சகோதரிகள் பண உதவி செய்வர். வாகனப்பழுது நீங்கும். கூட்டுத் தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். எதிர்பார்த்த விலைக்கேபூர்வீக சொத்தை விற்பீர். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்தி தரும். அரசுக் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

தனுசு: புதியவர்களின் அறிமுகம் கிட்டும். வரவேண்டிய பணம் வந்து சேரும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மகரம்: கையிருப்பு கரையக் கூடும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் யாருக்கும் உறுதி மொழி அளிக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் வந்து சேரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். ஊர் விசேஷங்களில் கலந்துகொள்வீர். வியாபாரத்தில் கவுரவப் பதவி தேடி வரும். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும்.

மீனம்: தாய்வழி உறவினருடன் இருந்த பகை நீங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க எண்ணுவீர். அக்கம் பக்கத்தினரை அலட்சியப்படுத்தாதீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

SCROLL FOR NEXT