இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 நவம்பர் 2025

செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். மனதில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு தாயார் ஆதரவாக இருப்பார்.

கடகம்: குடும்பத்தில் நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் பிரபலமான வர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்: வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்: விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மகன், மகளுக்கு திருமண காரியங்கள் கைகூடி வரும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: வீண் அலைச்சல் வந்து போகும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எளிதில் முடியும் காரியங்கள்கூட இழுபறிக்குப் பின்னரே முடியும். எதிலும் நிதானம் அவசியம்.

தனுசு: மனப்போராட்டங்கள், குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள்.

மகரம்: குடும்பத்தினர் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களைத் தீர்க்க புதுவழி பிறக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

கும்பம்: தொட்ட காரியங்கள் துலங்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் தடங்கலின்றி நிறைவேறும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத் தினருடன் ஆலோசிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். சிலர் பழைய நகைகளை விற்று புது நகைகள் வாங்குவீர்கள்.

SCROLL FOR NEXT