இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 டிசம்பர் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்துமோதல் விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் புதுமுடிவுகள் எடுப்பதை தாமதப்படுத்தவும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

கடகம்: பணவரவு திருப்தி தரும். விலையுயர்ந்த கலை பொருட்கள், நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வாகனப் பழுது விலகும். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர். வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். உங்களைப் பற்றி உறவினர், நண்பர்கள் பெருமையாக பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரரின் ஆலோசனையை அலட்சியம் செய்யாதீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

துலாம்: நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவர். உடன் பிறந்தவர்கள் ஆதரவு தருவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரம் சிறக்கும். கடையில் சில மாற்றங்களை செய்வீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அனைவரிடத்திலும் எச்சரிக்கையாக இருக்கவும். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக்கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

தனுசு: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம்கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் ஒத்துழைப்பர். பூர்வீக சொத்து வழக்கில் நல்ல திருப்பம் வரும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர். ஊழியர்கள் மதிப்பர்.

மகரம்: மனைவி, தாயாரின் மருத்துவ செலவு குறையும். உடன்பிறந்தோர் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரம் சூடு பிடிக்கும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். ஊர் விசேஷங்களில் கலந்து கொள்வீர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். மனைவி வழியில் ஆதாயமுண்டு. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

SCROLL FOR NEXT