இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 டிசம்பர் 2025

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: செலவுகளைக் குறைத்து சேமிக்க எண்ணுவீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

ரிஷபம்: எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்பத்து பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

மிதுனம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். உடல் நலம் சீராக இருக்கும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர்.

கடகம்: பூர்வீக சொத்து வழக்கை விரைவில் முடிக்கப் பார்க்கவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். கடனாக கொடுத்த பணத்தை போராடி வசூல் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

சிம்மம்: கடந்த கால அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயல்வீர்.

கன்னி: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

துலாம்: பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.

தனுசு: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களை பகைத்து கொள்ளாதீர். அலுவலகத்தில் பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். கூட்டுத்தொழிலில் புது பங்குதாரர்களை பேசி சமாளிக்க வேண்டியிருக்கும்.

மகரம்: கவுரவப் பதவி தேடி வரும். சகோதரர்களுடன் இருந்த பகை நீங்கும். எதிர்பார்த்த விலைக்கே பூர்வீக வீடு விற்பனை ஆகும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். சொத்து பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து, பொறுப்பு கூடும்.

மீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபம் பார்ப்பீர்.

SCROLL FOR NEXT