மேஷம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர். குழப்பம் நீங்கி வீட்டில் நிம்மதி பிறக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். பூர்வீக சொத்து வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: தாய்வழி உறவினர்களிடம் மனக்கசப்புகள் வரலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
மிதுனம்: நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது ஆபரணம், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர் ஆதரவு தருவார். பணியாட்களிடம் கனிவாக பேசவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். கனிவான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் மற்றவர் பிரச்சினையில் தலையிடாதீர்.
சிம்மம்: இழுபறியாக இருந்த பணிகள் முடியும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாகும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
கன்னி: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பர். உடல் நலத்தில் கவனம் அவசியம். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்.
துலாம்: தடைபட்டு கொண்டிருந்த சுபகாரியம் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். வியாபாரரீதியாக சில முக்கிய பிரபலங்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
விருச்சிகம்: புதுப்புது எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. உடல் நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம் திருப்தியாக அமையும். பங்குதாரரின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
தனுசு: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீடு, விவசாய நிலம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்கள் தொந்தரவு தருவார்கள்.
மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தம்பதிக்குள் மனம்விட்டு பேசுவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
மீனம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். பிள்ளைகளால் இருந்து வந்த மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.