இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 ஏப்ரல் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: பேச்சில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு இருக்கும். பாக்கிகளை போராடி வசூலிப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

          

மிதுனம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம் விலகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பழுதான வாகனம் சீராகும். வியாபாரத்தில் போட்டியை சமாளிப்பீர். புதிய பங்குதாரின் கருத்துக்கு மதிப்பளிக்கவும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

கடகம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன்வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

சிம்மம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு கூடும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரரீதியான பயணம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் ஊழியர்கள் மதிப்பார்கள்.

துலாம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளின் நீண்ட கால விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணியை முடிக்க முடியாமல் போராடுவீர். குடும்பத்தில் வாக்குவாதம் வந்துபோகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

தனுசு: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். மகள்வழியில் நல்ல செய்தி கேட்பீர். உறவினர், பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகனின் வேலை, மகளின் திருமணம் குறித்து தீவிரமாக யோசிப்பீர். பிரியமானவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபமுண்டு.

மீனம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். உறவினர்கள், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் கருத்தை அலட்சியப்படுத்தாதீர். உத்தியோகம் சிறக்கும்.

SCROLL FOR NEXT