மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
ரிஷபம்: பணவரவு திருப்தி தரும். பழைய கடனை அடைப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சை ஏற்பார்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
மிதுனம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கடகம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணங்கள் திருப்தி தரும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
துலாம்: அவசர முடிவுகள் வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து போகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு தீரும். அலுவலகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
விருச்சிகம்: புது எண்ணம் மனதில் தோன்றும். முகப் பொலிவு கூடும். நீண்டநாளாக இழுபறியான காரியம் நிறைவேறும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் பதவி போட்டிகள் குறையும். வியாபாரத்தில் போட்ட முதலீடு இரட்டிப்பாகும்.
தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். மேலதிகாரி ஆதரிப்பார்.
மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
கும்பம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு உண்டு. பொறுப்பு கூடும்.
மீனம்: அனைவரிடமும் இங்கிதமாக பேசி பணியை முடிப்பது நல்லது. பிள்ளைகளால் கையிருப்பு கரையும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்கள். விவாதங்களை தவிர்த்து அமைதி காக்கவும்.