மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: முன்கோபத்தை குறைப்பது நன்மை தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். ஓரளவு லாபம் பார்ப்பீர்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.
சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன் கோபம் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பர்.
கன்னி: பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். திட்டமிட்ட பணியை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழல், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கையில் பணம் புரளும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
தனுசு: அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பீர். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.
மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மதிப்பு உயரும்.
மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க போராடுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகரீதியான பயணம் அலைச்சல் தரும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துவது நல்லது.