இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். அலுவலகரீதியாக பயணம் செல்வீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

          

மிதுனம்: மனதில் பயம், படபடப்பு வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

சிம்மம்: எதிரிகள் பணிந்து போவர். தம்பதிக்குள் இருந்த கருத்து மோதல் விலகி மகிழ்ச்சி உண்டு. விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடுகளைகட்டும். வெளியூர் பயணம் திருப்தி தரும். அலுவலகத்தில் அமைதிகாப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனச் செலவுகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

துலாம்: மறைந்து கிடந்த திறமை வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு கூடும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும்.

விருச்சிகம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். உடன்பிறந்தவர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

மகரம்: குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர். புதியவர் நட்பால் உற்சாகமடைவீர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலைச்சல் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

கும்பம்: சிந்தனைத் திறன் கூடும். சோர்வாக இருந்த நீங்கள் சுறு சுறுப்படைவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி, பிள்ளைகள் உடல்நலம் சீராக இருக்கும். வாகனச் செலவு நீங்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில்தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனம் அவசியம்.

SCROLL FOR NEXT