இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கல்வியாளர், அறிஞர்கள் நட்பால் தெளிவு பெறுவீர். பூர்வீக சொத்து வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: எதிர்காலம் தொடர்பாக மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

          

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர். மனைவிவழியில் ஆதாயமுண்டு. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் சிறக்கும்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய கடனையை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

சிம்மம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். வீடு, வாகனத்தில் பழுதை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.

கன்னி: தொட்டது துலங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முன்கோபத்தை தவிர்த்து அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: சேமிப்புகள் கரையக் கூடும். கணவன் - மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உடன் பிறந்தவர்களால் செலவு உண்டு. அலுவலகத்தில் குழப்பங்கள் தீரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு கூடும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்ப்பீர்.

தனுசு: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எண்ணங்கள் ஈடேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

மகரம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் போட்டி விலகும்.

கும்பம்: கடந்த கால அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்.

SCROLL FOR NEXT