மேஷம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கவும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. வாகனத்தால் கையிருப்பு கரையும். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக்காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.
கடகம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரர் ஆதரவு தருவார்.
சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
கன்னி: திட்டமிட்ட வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனம் ஓட்டும்போது, பயணங்களின்போது எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்களிடம் நிதானத்துடன் பழகுவது நல்லது. புது வேலையில் சேருவீர். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
விருச்சிகம்: நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த பயணம் சாதகமாக அமையும். தம்பதிக்குள் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அலுவலக ரீதியாக பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
தனுசு: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வீர். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பயணங்கள் திருப்தி தரும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். வீட்டுக்கு புதிய பொருட்கள் வந்து சேரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
கும்பம்: வேற்று மொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். தாயார் ஆதரவாக இருப்பார்.