மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்கு வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். தயார் ஆதரவாக இருப்பார்.
ரிஷபம்: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணம் உண்டு.
மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மாரியதை கூடும். பதவி, பொறுப்பு தேடி வரும். மகிழ்ச்சிகரமாக சூழல்கள் நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.
கடகம்: சொந்தபந்தங்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: நீண்ட காலமாக தடைபட்டுக் கொண்டிருந்த திருமண பேச்சுவார்த்தை கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீர்திருத்தம் செய்வீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
கன்னி: காரியத்தடைகள், அலைச்சல் வரும். குடும்பத்தினரால் வீண் செலவு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும். அலுவலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
துலாம்: பிரச்சினைகளைச் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
விருச்சிகம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் செல்வீர்கள்.
தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். முகப்பொலிவு கூடும். வேலைதேடிக் கொண்டிருப்போருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
மகரம்: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் நீங்கும். வருமானத்தைப் பெருக்க வழி கிடைக்கும். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. மூத்த சகோதரர் உதவுவார்.
கும்பம்: கடந்தகால நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள். யாருக்கும் எந்தவித உத்தரவாதமோ, உறுதிமொழியோ கொடுக்க வேண்டாம். வெளியூர் பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை.