மேஷம்: உறவினர்களால் செலவுகள் வந்து போகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்
ரிஷபம்: பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். அக்கம் பக்கத்தினரை பகைத்து கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.
மிதுனம்: மனக் குழப்பம் வந்து போகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிட்டும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர் களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
கன்னி: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக்காட்டுவீர்கள். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பிரபலங் களால் பயனடைவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
விருச்சிகம்: கேட்ட இடத்தில் பணம் கிட்டும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். வெளியூர் பயணம் திருப்தி தரும். அலுவலகத்தில் ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்.
தனுசு: முகப் பொலிவு கூடும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிட்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் லாபம் தரும்.
மகரம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவுகள், அலைச்சல் இருக்கும். தந்தைவழி உறவினருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலக பணிகளை வீட்டிலும் செய்ய வேண்டி வரும்.
கும்பம்: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
மீனம்: நவீன மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம்-பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வீர்கள்.