இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். சில நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

          

மிதுனம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து பொறுப்புடன் செயல்படுவர். தந்தையின் முன்கோபம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர். வியாபார போட்டி கூடும்.

கடகம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

சிம்மம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலக மேலதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர்.

கன்னி: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும்.

துலாம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.

விருச்சிகம்: மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலக பணிகளில் இருந்த தொய்வு விலகும். மேலதிகாரி உதவிகரமாக இருப்பார்.

தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்வது நல்லது. பணப்பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பணியாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிரபலங்களின் உதவியுடன் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.

மீனம்: முக்கிய பிரமுகர்கள் உதவுவர். நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவெடுப்பீர். பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்.

SCROLL FOR NEXT