இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வரும். சேமிப்பு கரையும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டி கூடும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் விவாதங்கள் வேண்டாம்.

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். கருத்து மோதல் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

          

மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். மனைவிவழியில் பகை வேண்டாம். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். பூர்வீக சொத்து விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பீர். வியாபாரத்தில் இருந்த அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: குடும்பத்தினரைக் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். அரசால் அனுகூலம் உண்டு. முக்கிய பிரமுகர்களுடன் நட்பு கிடைத்து, அவர்கள் இல்ல விசேஷங்களில் பங்கேற்பீர். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு.

கன்னி: பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் முன்பைவிட தற்போது விறுவிறுப்பாக அமையும். பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் -மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். யாருக்கும் எக்காரணம் கொண்டும் சாட்சி கையெழுத்திடாதீர். மனைவியுடன் மனஸ்தாபம் வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

தனுசு: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. அவர்கள் படிப்பு விஷயமாக செலவுகள் இருக்கும். சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்களின் வருகை உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர்கள்.

கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். வியாபார ரீதியாக பயணம் செல்வீர்கள். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரி பாராட்டுவார்.

மீனம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

SCROLL FOR NEXT