இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 மார்ச் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

          

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.

கடகம்: மனதில் இருந்துவந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். வெளியூர் பயணம் உண்டு.

சிம்மம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கன்னி: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: நீண்டநாட்களாக மனதை சஞ்சலப்படுத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புது ஆபரணங்கள், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவு தருவார்கள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.

விருச்சிகம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

தனுசு: சாதுர்யமாகப் பேசி தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். திருமண காரியங்கள் கைகூடி வரும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும்.

மகரம்: பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி அன்பு காட்டுவார். கலைப்பொருட்கள் சேரும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அடிக்கடி செலவுவைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். முகத்தில் தெளிவு பிறக்கும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

SCROLL FOR NEXT