மேஷம்: நல்லவர் நட்பு கிட்டும். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். உங்கள் சேமிப்பு மேலும் அதிகரிக்கும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: மனக் குழப்பம் நீங்கும். அறிஞர், கல்வியாளர், நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். நினைத்த காரியம் நிறைவேறும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.
கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரிடம் விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
தனுசு: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கும்பம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
மீனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.