இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 பிப்ரவரி 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

          

மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய யுக்திகளை கையாள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

கன்னி: முகப் பொலிவு கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர். உறவினர், நண்பர்கள் உதவுவர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுண்டு. சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

துலாம்: நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

தனுசு: குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். தாயாரின் உடல்ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மகரம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். வியாபாரம் திருப்தி தரும். நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும்விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். பங்குதாரர்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.

SCROLL FOR NEXT