மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வாகனத்தை மாற்ற வழி பிறக்கும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவல கத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்: குடும்பத்தில் சிறு சிறு கருத்துமோதல்கள் வரக் கூடும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும், அலுவலகத்தில் சக ஊழியர்களை குறை கூறாதீர். நீண்ட நாளாக தேடிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: பணவரவு திருப்தி தரும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி அனைவரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம்.
சிம்மம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிட்டும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கன்னி: தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்: உறவினர், நண்பர்கள் வகையில் விரயச் செலவு வரக்கூடும். பழைய வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பணியாட்கள் தொந்தரவு தருவர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: புதுப் புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற பணி முடியும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.
தனுசு: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மகரம்: தொட்ட காரியம் துலங்கும். தடைகள் விலகும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை தைரியமாக எடுப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளவும்.
கும்பம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. அவர்களுடன் இருந்த கருத்துமோதல் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.
மீனம்: புதியவர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். அடிமனதில் இருந்த பயம் நீங்கும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கவும். வியாபார போட்டிகள் குறையும்.