மேஷம்: பழைய சம்பவங்களை நினைத்து வருந்தாமல், எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் வந்துபோகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பழைய சரக்குகள் விற்பனையாகும். புதிய ஆர்டர்கள் குவியும்.
ரிஷபம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் நிலவிய பனிப்போர் நீங்கும். வாக்குவாதங்கள் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து கூடும். நல்லவர்களின் நட்பால் ஆதாயம் கிடைக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
கடகம்: கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நேர்த்திக் கடனை நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள்
துலாம்: வீண் குழப்பம், திடீர் பயணம், அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்துக்கு இடம்தராமல் பொறுமையாக செயல்படுங்கள். எதிலும் நிதானம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பலமுறை யோசித்து செயல்படுங்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். முக்கிய வேலைகளை உங்கள் நேரடி பார்வையில் முடிப்பது நல்லது.
தனுசு: விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட அரசு, வங்கி தரப்பில் உதவிகள் கிடைக்கும்.
மகரம்: மனதை வாட்டிவந்த சஞ்சலங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். புதிய மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள், இடையூறுகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிவடையும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். தாய் வழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
மீனம்: பழைய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டாகும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள்.