மேஷம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் பழைய பகையை மறந்து, கனிவாகப் பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்திகள் வரும். வாகனப் பழுது நீங்கும்.
ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நட்புகள் மலரும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனச் செலவு குறையும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு உண்டாகும். மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகன பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
கடகம்: திடீர் பயணம், அலைச்சல், செலவுகள் இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வீடு, தொழில் விரிவாக்கப் பணிக்கு கேட்டிருந்த கடனுதவிகள் கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய மின்னணு சாதனங்கள் சேரும்.
கன்னி: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தீரும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார்.
துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரிய பதவி, பொறுப்புக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் உண்டாகும்.
விருச்சிகம்: உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. உணவில் கட்டுப்பாடு அவசியம். அக்கம் பக்கத்தினர் உரிய நேரத்தில் உதவுவார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள்.
தனுசு: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். சோர்வு, களைப்பு நீங்கி, உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளால் மன நிம்மதி கிடைக்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மகரம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு செயல்படுங்கள். பழைய வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் தேங்கினாலும், சமாளிப்பீர்கள்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். கையில்காசு, பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் சேரும்.
மீனம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம், அனுகூலம் உண்டு. குலதெய்வ வழிபாடுகளை நல்லபடியாக செய்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.