மேஷம்: மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் சின்னச் சின்ன செலவுகள் வரலாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.
மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சிறக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும்.
கடகம்: உடல் நலக் குறைவு, மனச்சோர்வு வரக் கூடும். திட்டமிட்டபடி வேலைகளை முடிக்க முடியாமல் திணருவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
சிம்மம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர். முடியாமல் போன சில காரியங்களை முடிப்பீர்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போகவும். பிள்ளைகளிடமிருந்த மனக் கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரத்தில் பிரபலங்களின் நட்பு கிட்டும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
விருச்சிகம்: தம்பதிக்குள் விவாதங்களை தவிர்க்கவும். பயணங்கள் திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
தனுசு: வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் மனதை வாட்டும். விரயச் செலவுகள் கையிருப்பை குறைக்கும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். பணிச்சுமை கூடும்.
மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வீடு வந்து சேரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். உங்கள் உடல்நிலை திருப்தி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.
மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. பூர்வீக சொத்தை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.