இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 ஜனவரி 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணவரவு கூடும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: சேமிப்பு கரையும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக சொத்து விவகாரத்தில் அமைதி காப்பீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள்.

          

மிதுனம்: நவீன மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம்-பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். மனைவி வழியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். மேலதிகாரி ஆதரவு தருவார்.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். நண்பர்கள் தேடி வருவர். அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். பங்குதாரரின் ஆலோசனைகளைக் கேட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபம் தரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

துலாம்: கடந்த கால சுகமான அனுபவம், சாதனைகளை அவ்வப் போது நினைத்து மகிழ்வீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செயல்படுவது நல்லது.

விருச்சிகம்: தவிர்க்க முடியாத செலவு வந்து போகும். நெருங்கிய உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் உண்டு. அலைச்சல் கூடும்.

தனுசு: தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். முகப் பொலிவு கூடும். நண்பர்களுக்கு கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளிவட்டாரத்தில் புதியவர் நட்பு கிட்டும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.

கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக்குழப்பம் நீங்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்துப் போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் நற்பெயர் கிட்டும்.

SCROLL FOR NEXT